நில அபகரிப்பு குற்றவாளிகள் தப்ப முடியாது – ஜெ.

 Dr. J.Jayalalitha
நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தனியார் நிலங்கள் அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெருமளவில் நடைபெற்றதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே தான், அ.தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், தி.மு.க. மந்திரிகளாலும், அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. செயற்குழு 20-ந்தேதி கூடுகிறது – ஜெ. அறிவிப்பு ADMK

அதிமுக செயற்குழு இம்மாதம் 20-ம் தேதி கூடுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு? முதல்வரிடம் அறி்க்கை தாக்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா
 உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவு, வளமான பிரிவு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட அறி்க்கையை முதல்வரிடம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று அளித்தது.
ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனில், அத்தகைய முடிவு, எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின்படி அமைய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு  உத்தரவிட்டது. மேலும், அரசு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில்  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓராண்டிற்குள் தனது பரிந்துரையை அரசிற்கு அளிக்க வேண்டுமென்றும், உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

அண்ணா பிறந்த நாளில் ஏழைகளுக்கு இலவச ஆடு மாடுகள் – ஜெ அறிவிப்பு

அண்ணா பிறந்தா நாளான செப்டம்பர் 15ம் தேதி, முதல் கட்டமாக 1600 குடும்பங்களுக்கு இலவச ஆடுமாடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா
இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
எனது தலைமையிலான அரசு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்குண்டான திட்டங்களைத் தீட்டி மக்கள் வாழ்வு வளம் பெறவும், அவர்கள் நலன் பேணிப் பாதுகாக்கப்படவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, நான் முதல்-அமைச்சராக பதவியேற்று கொண்ட அன்றே மக்கள் பயன் பெறத்தக்க திட்டங்களில் கையெழுத்திட்டேன்.

சூரிய மின்வசதியுடன் பசுமை இல்லங்கள்- ஜெ. ஆய்வு

சூரிய மின்வசதியுடன் பசுமை இல்லங்கள்– ஜெ. ஆய்வு
சூரிய சக்தி மின்வசதியுடன் பசுமை வீடுகள்  கட்டும் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டம், இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சார பயன்பாட்டுடன் கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இன்றும் கலக்கும் எம்ஜிஆர் படங்கள் – கட்அவுட் வைத்துக் கொண்டாடிய கர்நாடக ரசிகர்கள்

இன்றும் கலக்கும் எம்ஜிஆர் படங்கள் – கட்அவுட் வைத்துக் கொண்டாடிய கர்நாடக ரசிகர்கள்

கர்நாடகாவில் உள்ள 11 திரையரங்குகளில் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் திரைப்படம் திரையிடப்பட்டது. பிரம்மாண்ட கட்அவுட்டுகள், தோரணங்கள் என அலங்கரித்து, எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
எம்.ஜி.ஆரின் பழைய திரைப்படங்கள் சென்னையில் வெளியாகி வசூலை வாரிக் குவிக்கின்றன. “நினைத்ததை முடிப்பவன்”, “ஆயிரத்தில் ஒருவன்”, “அடிமைப்பெண்”, “நாடோடி மன்னன்”, “உலகம் சுற்றும் வாலிபன்”, “நேற்று இன்று நாளை”, “எங்க வீட்டுப்பிள்ளை” உள்ளிட்ட பல படங்கள் இங்கு தொடர்ச்சியாக வெளிவருகின்றன.

சென்னையில் உலக செஸ் போட்டி – ஜெ. அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா
 இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் உலக செஸ் போட்டி நடத்த முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலயும்ழினோவ் சந்தித்தார். அப்போது 2012-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டியை சென்னையில் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதுவரை இந்தியாவில் சதுரங்கப் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற 24 பேரில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உலக சதுரங்கத்தில் இந்தியா 7-வது இடத்தைப் பெற்றுள்ளது.

செங்கல் லோடுக்கு 3000, ஜல்லி ரூ.700 குறைகிறது – ஜெ. நடவடிக்கை

தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ரத்தினசேகர் சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்தார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ரத்தினசேகர் சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்தார்.அப்போது, பொது மக்களுக்கு சிரமமின்றி சரியான விலையில் செங்கல் கிடைத்திட முதல்-அமைச்சரின் முந்தைய ஆட்சி காலத்தில் (2001-2006) வருடாந்திர கட்டண முறை கொண்டுவரப்பட்டது.
அதே போன்று தற்போது ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் கட்டும் முறையை மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக கட்டணம் செலுத்திட ஆவன செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

AIADMK executive meeting postponed

The AIADMK executive meeting slated for July 20 has been postponed to July 30, according to a release from party general secretary and Chief Minister Jayalalithaa.

The meeting will be held at the party headquarters and presidium chairman E. Madhusoodhanan will chair the meeting.