AIADMK

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரிய ஜெ.வுக்கு நன்றி-விஜய்

உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தீர்மானம் ஆறுதலாக இருக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் இது பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்று இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றவாளி என்று அடையாளம் காட்டியுள்ள இந்த வேளையில், தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு

அதிமுக ஜெயிக்க வேண்டும் என்றேன்... அதற்கு பலன் கிடைத்தது! - விஜய்

  தமிழகத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று கடுமையாக உழைத்தீர்கள். அதன் பலனாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றார், என்று நடிகர் விஜய் கூறினார்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கிய பின் நடிகர் விஜய் பேசியதாவது:

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.

நாளை அதிமுக செயற்குழு கூடுகிறது

அதிமுக செயற்குழு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக தலைமைச் செயலகத்தில் கூடுகிறது. அதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டமும் நடக்கிறது.

அதிமுக செயற்குழு கூட்டம் ஜூலை 30ம் தேதி நடக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். அறிவித்தபடி இந்த கூட்டம் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக தலைமை செயலகத்தில் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கிறது.

இதற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். இதில் 275 பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் சிலர் கலந்து கொள்கின்றனர்.