அணைகள் பாதுகாப்பு சட்டம்: ஜெ.வுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்டும்: வைகோ

திருநெல்வேலி: மத்திய அரசின் புதிய அணை மசோதாவை எதிர்த்து அனைத்து கட்சிகளு்ம் போராட வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுப்பியுள்ள குரலுடன் இணைந்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நெல்லையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி மதிமுக தென்மண்டல மாநாடு நடக்க உள்ளது. இது தொடர்பாக நெல்லை புறநகர், மாநகர், விருதுநகர், தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளை, நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.

தமிழகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் அணை பாதுகாப்பு மசோதாவை திருத்த பிரதமருக்கு ஜெ. கடிதம்

 தமிழகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் அணை பாதுகாப்பு மசோதாவை திருத்தக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

நீர்வளத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா-2010-ல் அடங்கியுள்ள சில ஷரத்துகளைப் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன். அவை தமிழ்நாட்டின் நலனுக்கு கேடு விளைவிப்பவையாகும்.

அந்த மசோதாவின் 26(1)-ம் பிரிவில், `குறிப்பிட்ட அனைத்து அணைகளும், எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறதோ, அந்தந்த மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அல்லது மாநில அணை பாதுகாப்புப் பிரிவின் அதிகார எல்லைக்கு அவை உட்பட்டவை.

திமுகவினர் மீதான நில அபகரிப்பு வழக்குகள் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல-ஜெயலலிதா

நில அபகரிப்பு வழக்குகள் அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சி காலத்தில் நில அபகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் செய்தார்கள். ஆனால் அப்போதைய ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து புகார் செய்து வருகிறார்கள் என்று விளக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னையில் நேற்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் நடந்தது. இவற்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கு போடுவது அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறுகிறார்களே என்று கேட்டபோது,