ரூ. 22 கோடியில் ஏரி, கால்வாய்களை புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

 ரூ. 22 கோடி செலவில் வோலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூவம் உப வடிநிலத்தின் கீழ் உள்ள ஏரிகள், கால்வாய்களை புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மாநிலத்தின் பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள பாசனக் கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்து அவைகளை பழைய நிலைக்குக் கொண்டுவர, நீர்வள ஆதார தொகுப்புத் திட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

இதன் தொடர் திட்டமாக, உப வடிநில கட்டமைப்பு முறையில் பாசன சேவை மற்றும் வேளாண் உற்பத்தித் திறன் ஆகியவற்றை மேம்படுத்த ‘தமிழ்நாடு நீர்வள, நிலவளத் திட்டம்' ரூ. 2 ஆயிரத்து 547 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.