தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டத்துக்கு ரூ. 912 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு, தனது இலவச லேப்டாப் திட்டத்துக்கு ரூ. 912 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்ததாவது:

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த பொன்னாளான செப்டம்பர் 15-ந்தேதி அன்று இத்திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும். ஊரகப்

ஒளிபரப்பு தொடங்கும்- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு முழு அளவில் தொடங்கும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அவர் பேசுகையில், 

அரசு கேபிள் டி.வி. ஏற்கெனவே அறிவித்தபடி அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகத்தைப் புத்துயிரூட்ட இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது தஞ்சாவூர், கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஒளிபரப்பு தலை முனையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இலவச மின்விசிறி, மிக்சி,கிரைண்டர் திட்டத்துக்கு ரூ.1,250 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு, தனது மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் திட்டத்துக்கு ரூ. ஆயிரத்து 250 கோடியும், இலவச தங்கத் தாலி திட்டத்துக்கு ரூ. 514 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இது குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்ததாவது:

தேர்தல் அறிக்கையில் வாக்களித்தப்படி பெண்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்கும் திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் அன்று இந்த அரசு தொடங்கும்.

இணைத்து பெருநகர் காவல் ஆணையம் அமைப்பு- பட்ஜெட்

சென்னை மாநகர காவல் ஆணையத்தையும், புறநகர் காவல் இணையத்தையும் இணைத்து பெருநகர காவல் ஆணையம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையின் செயல்பாட்டை சீராகவும், சிறப்பாகவும் மேம்படுத்தும் பொருட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையத்துடன், செங்கை கிழக்கு காவல் மாவட்டம் இணைக்கப்பட்டு பெருநகர் காவல் ஆணையரகம் ஏற்படுத்தப்பட்டது.

இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 135, மாடுகள் திட்டத்துக்கு ரூ. 56 கோடி ஒதுக்கீடு

 தமிழக அரசின் இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 135 கோடியும், இலவச மாடுகள் திட்டத்துக்கு ரூ. 56 கோடியும் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று 2011-12ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.

காலை 10.40 மணிக்கு சட்டசபை கூடியதும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.