சுதந்திரப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகள் வழி நின்று பாரதத்தைக் காப்போம்-ஜெயலலிதா

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, வரலாற்றில் இடம் பிடித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வழி நின்று பாரதத்தைக் காப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா அறைகூவல் விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

பாருக்குள்ளே நல்ல நாடாம் நம் பாரத நாடு, பழம் பெருமை, இயற்கை வளங்கள், புண்ணிய தலங்கள், சிறந்த பண்பாடு, உயர்ந்த கலாச்சாரம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதோடு, உலக நாடுகள் வியக்கக் கூடிய வகையில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒருமைப்பாட்டுணர்வை வளர்த்து வருகிறது.

தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர்: மன்னிப்பு கேட்கக்கோரி ஜெயலலிதா கடிதம்

தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம் தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை.

சுதந்திர தினம்: நாளை கொடியேற்றுகிறார் ஜெயலலிதா-கோட்டையில் 4 அடுக்கு பாதுகாப்பு

 சுதந்திர தினத்தையொட்டி நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார். இதனால் கோட்டை மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 64-வது சுதந்திர தினம் நாளைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் யாரும் ஊடுருவி விடாமல் இருக்க மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகியவை போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

8 மணிக்குக் கொடியேற்றுகிறார் ஜெயலலிதா

நாளை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.