106 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த ஜெயலலிதா

106 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

106 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி புதிய பேருந்துகள் துவக்க விழா சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் இன்று காலை நடந்தது. இந்த எளிமையான விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.

புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimester' கல்வி முறை அறிமுகம்!

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக கல்வித் திட்டத்தில் சில மாற்றங்களை சட்டசபையில் ஜெயலலிதா இன்று அறிவித்தார். அதன் விவரம்: