இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டம்- நாளை தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா

திருவள்ளூரில் நாளை நடைபெறும் பிரமாண்ட விழாவில், தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு மாடுகள், லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தில் நாளை முதல் இலவசப் பொருட்களின் விநியோகம் தொடங்குகிறது.

அ.தி.மு.க. அரசின், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த இலவச கிரைண்டர், மிக்சி, மின் விசிறி உள்ளிட்ட இலவச திட்டங்களை நாளை முதல்வர் ஜெயலலிதா நாளை திருவள்ளூரில் துவக்கி வைக்க உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெல்ல சுற்றிச் சுழன்று பணியாற்றிடுங்கள்- ஜெயலலிதா

 மக்கள் நலத் திட்டங்கள் தொடர, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என அண்ணா பிறந்த நன்னாளில் கேட்டுக் கொள்வதோடு, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையும் வண்ணம், நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களிலும் அனைத்திந்திய அதிமுக வெற்றி பெற, அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் திறம்பட சுற்றிச் சுழன்று களப் பணியாற்றி வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. அரசின், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த இலவச கிரைண்டர், மிக்சி, மின் விசிறி உள்ளிட்ட இலவச திட்டங்களை நாளை முதல்வர் ஜெயலலிதா நாளை திருவள்ளூரில் துவக்கி வைக்க உள்ளார்.

தமிழக எம்.எல்.ஏக்களுக்கு தொகுதிப் படி உயர்வு- இனி சம்பளம் ரூ. 55,000!

தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கான தொகுதிப் படி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம் இனி மாதம் ரூ. 55,000 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்ததாவது:

சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிப் படி தற்போது உள்ள ரூ. 5000 என்பதிலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படுகிறது.

அதேபோல சபாநாயகர் மற்றும் அமைச்சர்களின் படியும் ரூ. 5000 என்பதிலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்படுகிறது.