கூட்டணிக் கட்சிகள் ஆதரவே இல்லாமல் ஜெயித்த அதிமுக!

கூட்டணிக் கட்சிகளை கழற்றி விட்டு விட்டு தனித்துப் போட்டியிட்ட அதிமுக திருச்சி மேற்கில் வெற்றி பெற்றிருப்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

திருச்சி மேற்குத் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருச்சி மேற்கில் எப்படியும் அதிமுகதான் போட்டியிடும் என்பதால் அதுகுறித்து அக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த எந்தக் கட்சியும் கவலைப்படவில்லை.

திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 14,694 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. அங்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவேட்பாளர் மு.பரஞ்சோதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்டதிமுகவின் கே.என்.நேருவை 14,694 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் 2வது முறையாக அவர் சட்டசபைக்குச் செல்கிறார்.

திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் பரஞ்சோதியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிட்டனர். பிற முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரசாரம் செய்யவும் இல்லை.