மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் தேர்தலில் அதிமுக பெருவாரியாக வெற்றி

 தமிழக மாநகராட்சிகளில் நடந்த மண்டலக் குழுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவே பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது.

மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் அனைத்து மண்டலங்களிலும் அதிமுகவினரே பெருவாரியாக வென்றுள்ளனர்.

டெல்லியில் நடந்த அத்வானி யாத்திரை நிறைவு கூட்டத்தில் அதிமுக பங்கேற்பு

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை நிறைவையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்றுநடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பிரநிதியாக தம்பித்துரை எம்.பி கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.

மேலும் மேலும் கடன் வாங்கினால் மக்கள் தலையில்தானே விடியும்?-ஜெ.

கடன் வாங்கியாவது பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்து கழகங்களை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் கூறுவது போல், மேலும் மேலும் கடன் வாங்கினால் அது யார் மீது விடியும். அதுவும் மக்கள் மீது தானே விடியும். இது எப்படி ஒரு நல்ல நிர்வாகமாக இருக்க முடியும் என்று கேட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களை உயிர்ப்பிப்பதற்கும், இந்த நிறுவனங்கள் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றிடுவதற்கான வழிவகை குறித்தும் 17.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கட்டண உயர்வுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன.