AIADMK's Mission 234 - Promo 1 | All India Anna Dravida Munnetra Kazhagam | AIADMK

AIADMK's Mission 234 - Promo 1 | All India Anna Dravida Munnetra Kazhagam | AIADMK

AIADMK GOVERNMENT ADI DRAVIDAR & TRIBAL WELFARE ACHIEVEMENT 2015

ADI DRAVIDAR & TRIBAL WELFARE

banner_achievements2
  • The scale of finance for taking up self-employment ventures through TAHDCO has been stepped up to Rs.7.50 lakhs with 30 per cent subsidy or Rs.2.25 lakhs, whichever is less.
  • 50% or Rs.2.50 lakhs as subsidy to SHGs for economic development activities through TAHDCO.
  • Counselling Centres started to encourage Adi Dravida entrepreneurs.
  • Increase of monthly feeding charges for SC/ST school and college hostel students from Rs.450/- to Rs.650/- and for college students from Rs.650/- to 750/-.
  • Upgradation of 10 Middle Schools as High Schools and 10 High Schools as Higher Secondary Schools.
  • A special grant of Rs.39 crores to provide toilet facilities in 779 Adi Dravidar Welfare schools.
  • Allocation of Rs.43 crores for distribution of free bicycles to SC/ST students.
  • Allocation of Rs.246 crores for Tribal Welfare.
  • A special grant of Rs.10.76 crores for the development of Vulnerable Tribal Groups.
  • Rs.13.26 crores as Share Capital Assistance to TAHDCO.
  • Certificates to 43 students who completed film industry training at NFDC recommended through TAHDCO.
  • Government to bear the compulsory fees including the Tuition fees fixed for SC/ST/SCC students admitted in self-financing colleges.
  • Increase of Award amount to Rs.6,000 for SC students who secure highest marks in 12th Standard Public examination at District level.
  • Increase of Award amount for the first three positions to Rs.2,000, Rs.1,000 and Rs.500 respectively for those who secure highest marks in 10th Standard Public examination at District level.
  • Increase of Award amount under Chief Minister’s Merit Award, from Rs.1,500/- to Rs.3,000/- per year.
  • Increase of Award amount under Annal Gandhi memorial award, for the first year from Rs.1,500/- to Rs.2,000/- and for the next five years from Rs.1,000/- to Rs.1,500/-.
  • Increase of special scholarship amount to students who pursue degree courses from Rs.6,500/- to Rs.7,500/- and for the Post Graduate and Professional courses students Rs.7,000/- to Rs.8,000/-.
  • In the Government Public Examinations of 10th and 12th, each Headmaster bringing out 95% passes is paid Rs.10,000/- and subject teachers who bring out 100% success in their subjects are awarded Rs.5,000/-.
  • Under the special incentive scheme, the incentive for converted Christian students who do not stay in the Adi Dravidar Hostels has been raised from the Rs.65/- to Rs.125/- range to the Rs.100/- to Rs.175/- range. For those students who stay in the hostels, the incentive has been raised from the Rs.115/- to Rs.250/- range to the Rs.175/- to Rs.350/- range.
  • Increase of miscellaneous charges for soap, oil   etc., to school students, from Rs.25 to Rs.50/- and for college students from Rs.35/- to Rs.75/-.
  • 1,500 additional seats in Adi Dravidar / Tribal Hostels.
  • Additional allocation of Rs.41.26 crores to reduce dropouts and encourage girl students to continue education under Girls Education Incentive Scheme.
  • Allocation of Rs.25 crores under Special State Allowance for skill development and entrepreneurship development programme for 25,000  youth.
  • Allocation of  Rs.370.27 crores for the year 2011-2012 & Rs.390.78 crores for the year 2012-2013 for the Educational Scholarship of 10th standard and above.
  • Allocation of Rs.50 crores under Comprehensive Tribal Development programme.
  • Own buildings for 93 SC/ST student’s hostels running in private rented buildings at a cost of estimate of Rs.68.15 crores.
  • Allocation of Rs.83 crores for upgradation of essential infrastructure facilities in 1,080 students hostels.
  • Increase of incentive to Rs.10 lakhs under Select Village Scheme for eradication of untouchability in each district.
  • Allocation of Rs.5.28 crores for the provision of Two-Tier Steel cots to college hostel students.
  • Increase of amount to Rs.50,000 for candidates who pass  UPSC Preliminary Exam of the Central Government.
  • Separate state-level awards for Adi Dravidar, Scheduled Tribes and Adi Dravidars converted to Christianity who are studying 12th standard and secure the first 3 places. The first prize given is Rs.50,000/-, the second Rs.30,000/- and the third Rs.20,000/-.
  • Increase of cash award to writers to Rs.40,000/- to SC/ST/SCC writers and  to one  non-SC writer for best Literary work.
  • 25 new Adi Dravidar and Tribal Welfare hostels at the cost of Rs.3.82 crores.
  • For protecting the healthy environment of students of 582 hostels and GTR schools, supply of Napkin burners at the cost of Rs.1.46 crores.
  • Allocation of Rs.30 crores for renovation / special repairs in
    200 Adi Dravidar Welfare primary schools.
Schemes for 2013-2014
  • Rs.7,042 crores allocated for Adi Dravida Welfare. This is an increase of Rs.15.29 crores.
  • Rs.489.48 crores allotted for Welfare of Scheduled Tribes.
  • Rs.479.87 crores allotted for Educational assistance. This is a 10.62%  increase.
  • Rs.56.34 crores for Bicycles at no cost.
  • New buildings for 44 hostels at a cost of  Rs.35.04 crores.

கழக நிரந்தர பொது செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை கரூர், புதுக்கோட்டையில் 2 புதிய மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்

அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை கரூர், புதுக்கோட்டையில்
2 புதிய மருத்துவ கல்லூரிகள்
ரூ.429 கோடி ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவு
கரூர், புதுக்கோட்டையில் 2 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ரூ.429 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, அக்.25- தமிழகத்தில், தற்போது 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள இடங்களில் மொத்தம் 2,655 மாணவர்கள் எம்.பி. பி.எஸ். படித்து வருகின்றனர்.710 புதிய இடங்கள்2011-ம் ஆண்டு முதல் இன்று வரை 710 எம்.பி.பி.எஸ். இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பெருந்துறையில் இந்திய சாலை போக்குவரத்து நிறுவனம் நடத்தும் மருத்துவ கல்லூரியில் 60 மாணவர்களும், சென்னை கே.கே.நகர் ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களும் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர். 5,655 எம்.பி.பி.எஸ். படிப்புகோவையில் கட்டப்பட்டு வரும் ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி முடியும் தருவாயில் உள்ளது. இந்த கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்தும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 13 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 1,350 மாணவர்களும், 10 நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 1,650 மாணவர்களும் என மொத்தம் 5,655 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர். மேலும் 2 மருத்துவ கல்லூரிகள்இதுதவிர, கரூரில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதேபோல், புதுக்கோட்டையில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர் அறிவித்தார். இந்த 2 மருத்துவ கல்லூரிகளிலும் தலா 150 மாணவர்கள் என மொத்தம் 300 பேர் படிக்க முடியும். அடுத்த கல்வி ஆண்டில் இந்த 2 மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கூடுதலாக இடங்கள்மக்கள் நல்வாழ்வுத் திட்டங் களைத் திறம்பட செயல்படுத்துவதற்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் போதுமான தகுதி வாய்ந்த மருத்துவர்கள் அவசியம் ஆகும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி துவங்கப்படவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், ஆண்டிற்கு ஒன்று என மருத்துவ கல்லூரிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் 2012-13-ம் கல்வியாண்டில் சிவகங்கையிலும், 2013-14-ம் கல்வியாண்டில் திருவண்ணாமலையிலும், இந்த ஆண்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலும் தலா 100 மாணாக்கர்கள் சேர்க்கையுடன் 3 மருத்துவ கல்லூரிகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், கடந்த 4 ஆண்டுகளில், 7 அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 410 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு இந்திய மருத்துவ குழுமத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதனால் 2011-12-ம் ஆண்டில் 1,945 ஆக இருந்த மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள், 2015-16-ம் ஆண்டில் 2,655 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 710 இடங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன.கரூர்-புதுக்கோட்டை சென்ற ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரூரில் 150 மருத்துவ மாணாக் கர் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதன் அடிப்படையில் கரூரில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டுதல் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, புதுக்கோட்டையில் ஒரு புதிய அரசு மருத்துவ கல்லூரி 150 மாணாக்கர் சேர்க்கையுடன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார். அதன் அடிப்படையில், புதுக்கோட்டையில் புதியதாக ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான ஒப்புதலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆயத்த பணிகளுக் காக ஒரு சிறப்பு அலுவலர், முதல்வர் பணியிடத்தினை உருவாக்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இம்மருத்துவ கல்லூரி சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட தமிழக பெண்ணுக்கு நியாயம் வேண்டும்: மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா கடிதம்

சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் நாடு திரும்ப மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார். மோடிக்கு, ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்ற தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம், வீட்டு உரிமையாளர்களால் கை துண்டிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். எனது உத்தரவின்பேரில் இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு தமிழக அரசு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரகம், சவுதி அரேபிய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று சில நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது கஸ்தூரி உறுதியான மனநிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கஸ்தூரிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டில் இருந்து தப்பிஓட முயற்சிக்கும்போது தவறி விழுந்ததால்தான் கை துண்டானதாகவும் அவர் வேலை செய்த வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார். இதையே சவுதி அரேபிய காவல் துறையினரும் தெரிவித்துள்ளனர். எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஏழை கூலித் தொழிலாளியான கஸ்தூரிக்கு நீதி கிடைக்க சவுதி அரேபிய அரசை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல்நிலை மோசமாக உள்ள அவருக்கு நல்ல, தரமான சிகிச்சை கிடைக்கவும், பாதுகாப்பாக நாடு திரும்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஸ்தூரிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

கழக நிரந்தர பொது செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்

மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்
சென்னை, அக்.24-மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மின்சாரம் தாக்கி...இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-வேலூர் மாவட்டம், அரக்கோணம் கிழக்குப்பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த அன்வர்த்திகான்பேட்டை, கீழ்ஆவதம் பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்பவர் 6.6.2015 அன்று இந்திய கப்பற்படை வளாகம் அருகே மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், திருமானூர் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சேகர் 11.6.2015 அன்று முடிகொண்டான் கிராமத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தால் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மின்கம்பம் சாய்ந்து விழுந்ததுசேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் வடக்குப் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மஸ்தூராகப் பணிபுரிந்து வந்த சரவணன், ஜலகண்டாபுரத்தில் மின்கம்பம் நடும் பணியை மேற்கொண்டிருந்த போது, கம்பம் சாய்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், மேலத்திருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் 26.6.2015 அன்று காளப்பன்பட்டி கிராமத்தில் மின் இணைப்பை பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.தலா ரூ.3 லட்சம்இந்த துயரச் சம்பவங்களில் அகால மரணமடைந்த விநாயகம், சேகர், சரவணன் மற்றும் பாண்டியன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.