கழக நிரந்தர பொது செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்

மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்
சென்னை, அக்.24-மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மின்சாரம் தாக்கி...இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-வேலூர் மாவட்டம், அரக்கோணம் கிழக்குப்பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த அன்வர்த்திகான்பேட்டை, கீழ்ஆவதம் பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்பவர் 6.6.2015 அன்று இந்திய கப்பற்படை வளாகம் அருகே மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், திருமானூர் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சேகர் 11.6.2015 அன்று முடிகொண்டான் கிராமத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தால் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மின்கம்பம் சாய்ந்து விழுந்ததுசேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் வடக்குப் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மஸ்தூராகப் பணிபுரிந்து வந்த சரவணன், ஜலகண்டாபுரத்தில் மின்கம்பம் நடும் பணியை மேற்கொண்டிருந்த போது, கம்பம் சாய்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், மேலத்திருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் 26.6.2015 அன்று காளப்பன்பட்டி கிராமத்தில் மின் இணைப்பை பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.தலா ரூ.3 லட்சம்இந்த துயரச் சம்பவங்களில் அகால மரணமடைந்த விநாயகம், சேகர், சரவணன் மற்றும் பாண்டியன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment