Showing posts with label tamilnadu chief minister fund under 110 article. Show all posts
Showing posts with label tamilnadu chief minister fund under 110 article. Show all posts

கழக நிரந்தர பொது செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்

மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்
சென்னை, அக்.24-மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மின்சாரம் தாக்கி...இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-வேலூர் மாவட்டம், அரக்கோணம் கிழக்குப்பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த அன்வர்த்திகான்பேட்டை, கீழ்ஆவதம் பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்பவர் 6.6.2015 அன்று இந்திய கப்பற்படை வளாகம் அருகே மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், திருமானூர் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சேகர் 11.6.2015 அன்று முடிகொண்டான் கிராமத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தால் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மின்கம்பம் சாய்ந்து விழுந்ததுசேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் வடக்குப் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மஸ்தூராகப் பணிபுரிந்து வந்த சரவணன், ஜலகண்டாபுரத்தில் மின்கம்பம் நடும் பணியை மேற்கொண்டிருந்த போது, கம்பம் சாய்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், மேலத்திருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் 26.6.2015 அன்று காளப்பன்பட்டி கிராமத்தில் மின் இணைப்பை பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.தலா ரூ.3 லட்சம்இந்த துயரச் சம்பவங்களில் அகால மரணமடைந்த விநாயகம், சேகர், சரவணன் மற்றும் பாண்டியன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

கழக நிரந்தர பொது செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் சட்டசபையில் அறிவித்த திட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் கலை, அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படும்

சட்டசபையில்   முதல்-அமைச்சர்  ஜெயலலிதா அறிவித்த திட்டம்
ஆர்.கே.நகர் பகுதியில் கலை, அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படும்
ரூ.8 கோடியே 28 லட்சம் வழங்க ஜெயலலிதா உத்தரவு
சென்னை, அக்.23-சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கலை, அறிவியல் கல்லூரி இந்த ஆண்டே செயல்படுகிறது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-ஜெயலலிதா அறிவித்ததுகடந்த 4½ ஆண்டுகளில் தமிழகத்தில் 4 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட 53 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே உயர் கல்வித்துறைக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் காரணமாக 2011-ம் ஆண்டில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் தற்போது 42.8 சதவீதமாக எட்டி இந்தியாலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.இந்த ஆண்டு முதல் செயல்படும்ஜெயலலிதா அறிவித்ததன் அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைபள்ளியில் தற்காலிகமாக 2015-2016 கல்வி ஆண்டு முதல் செயல்படுவதற்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இக்கல்லூரியில் பணியாற்றுவதற்காக 11 ஆசிரியர் மற்றும் 17 ஆசிரியரல்லாத பணியிடங்களை உருவாக்குவதற்கு தொடர் செலவினமாக 77 லட்சத்து 7 ஆயிரத்து 800 ரூபாய், கல்லூரிக்கென மரத்தளவாடங்கள், புத்தகங்கள், கணினிகள் மற்றும் இதர தளவாடங்கள் வாங்குவதற்காக தொடரா செலவினமாக 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் இக்கல்லூரிக்கென புதிய கட்டிடம் கட்டுவதற்காக 7 கோடியே 25 லட்சம் ரூபாய், என மொத்தம் 8 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் நிதிஉதவி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்:
உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிதிஉதவி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை, அக்.23-திருச்சி அருகே நடந்த அரசு பஸ்-லாரி மோதலில், உயிர் இழந்தவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பஸ்-லாரி மோதல்திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி சென்னை தேசிய நெடுஞ்சாலை, இருங்களூர் கிராமம் அருகே 20-10-2015 அன்று சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்றுகொண்டிருந்த அரசு பஸ், சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில், அரசு பஸ்சில் பயணம் செய்த சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த திருமாலின் மனைவி கோட்டீஸ்வரி, மகன் ஆத்திராஜ், மேடவாக்கத்தைச் சேர்ந்த பால்ராஜின் மகன் சுபின், திருநெல்வேலி மாவட்டம், புலிமான்மங்கலத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் வினோத், சிந்துபூந்துறை பகுதியைச் சேர்ந்த நெல்லையப்பனின் மகன் ஹரிகணேஷ்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடியைச் சேர்ந்த ராஜதுரையின் மகள் அன்னம்மாள், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த கென்னடிராஜின் மகன் மனோஜ், மார்த்தாண்டம், களியன்விளைவீடு பகுதியைச் சேர்ந்த கப்ரியேலின் மகன் ஜின்னிஸ்ஹெட்மெட் மற்றும் அகஸ்தீஸ்வரம், கீழகோணம் பகுதியைச் சேர்ந்த ஜேசுரத்தினத்தின் மகன் ஆண்டோசஞ்சு ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இரங்கல்இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விபத்தில் 15 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்திட மருத்துவமனை அதிகாரிகளுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிதி உதவிஇந்த விபத்து குறித்த தகவல் எனக்குக் கிடைக்கப்பெற்றதும், எனது உத்தரவின்பேரில், அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.பி.பூனாட்சி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அரசு கொறடா ஆர்.மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து உரிய மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தும், தேவையான நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டும் வருகிறார்கள். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் உடல் களை அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் கொண்டுசெல்லவும் நான் ஆணையிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அமைச்சர்கள் வழங்கினார்கள்விபத்தில் மனைவி மற்றும் மகனை இழந்த கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த திருமால் என்பவரின் வீட்டிற்கு அமைச்சர்கள் பா.வளர்மதி, பி.தங்கமணி, எஸ்.கோகுலஇந்திரா ஆகியோர் சென்று, அரசின் சார்பில் உடல்களுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகளை திருமாலிடம் வழங்கினர். உடன் சென்னை கலெக்டர் எ.சுந்தரவல்லி, எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.