கழக நிரந்தர பொது செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வாள்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு ரூ.2 லட்சம் பரிசு

போட்டியில் பங்கேற்கவும் நிதி உதவி அளித்தார்:
வாள்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு ரூ.2 லட்சம் பரிசு

சென்னை, அக்.23-சர்வதேச வாள்சண்டை போட்டியில் கலந்து கொள்ள தமிழக வீராங்கனை பவானிதேவிக்கு நிதிஉதவி வழங்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இப்போது போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்கும் பாராட்டி ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.ஜெயலலிதா வாழ்த்துதமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க வசதியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்கினார்.இந்த நிலையில் சர்வதேச போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய அவருக்கு மேலும் ரூ.2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சி.ஏ.பவானிதேவிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-பெல்ஜியத்தின் கென்ட் நகரில் நடந்த 18-வது பிளமிஷ் ஓபன் வாள்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நீங்கள் வெண்கலப்பதக்கம் வென்றதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதன் மூலம் தேசத்தையும், தமிழகத்தையும் பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள். சாதனை புரிந்த உங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.ரூ.2 லட்சம் பரிசுஇந்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றமைக்காக உங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பு பரிசு, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கடினமாக தயாராவதற்கும், எதிர்காலத்தில் பல வெற்றிகளை நாட்டிற்கும், தமிழகத்திற்கும் கொண்டு வருவதற்கும் உங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment