தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் ;சட்ட அமைச்சர் பதவி நீக்கம் ஏன்? புதிய தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஒன்றரை மாதத்தில் தமிழக அமைச்சரவையில் 2 வது முறையாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமோக ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., முதல்வரானார். கடந்த 15 ம் தேதி பொறுப்பேற்ற இவர் தனது கீழ் இயங்கும் 34 அமைச்சர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டார். இதில் பெரும்பான்மையானவர்கள் புதியவர்களே ஆவர் . கடந்த 27 ம்தேதி அமைச்சர்கள் இலாகாக்களை மாற்றியும், மேலும் புதிதாக முகம்மது ஜான் என்பவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய மாற்றத்தின்படி புதிய விவரம் வருமாறு:

கைத்தறி துறை அமைச்சராக இருந்த பி.வி.,ரமணன் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் சேர்த்து கவனிப்பார், சுற்றுலா துறை அமைச்சராக இருந்த புத்திச்சந்திரனுக்கு உணவுத்துறையும், உணவுத்துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு வணிகவரித்துறையும், வணிக
வரித்துறை அமைச்சராக இருந்த கோகுலஇந்திராவுக்கு சுற்றுலா துறையும், ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் ஜெ., உத்தரவின்படி கவர்னர் மாளிகை வட்டாரம் இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

சட்ட அமைச்சர் பதவி நீக்கம்: கடையநல்லூர் தொகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டியன் காதி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் நாளை பொறுப்பேற்பார் என்றும், சட்ட அமைச்சராக இருந்த இசக்கிசுப்பையா நீக்கப்பட்டு , செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராக இருக்கும் செந்தமிழன், சட்டத்துறையை சேர்த்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தூர்பாண்டியன், கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர்.அதிர்ந்துபேசாத முதியவர் என்ற பண்புகள் உள்ளன. அண்மையில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராகபொறுப்பேற்ற செந்தூர்பாண்டியன், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் பத்துக்கும் மேற்பட்ட கார்களுடன் அடைத்துக்கொண்டு சென்றது கட்சியினர், போலீசாரை முகம்சுளிக்க வைத்தது. எனவே அத்தகைய சர்ச்சைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது செந்தூர் பாண்டியனின் கடமையாகும்.

No comments:

Post a Comment