தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைக்கும் ஜெயலலிதா: அமைச்சர் செந்தூர் பாண்டியன்

நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா என்று கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை நகராட்சியில் சாலை பாதுகாப்பு விளம்பர பலகைகள், சிறுமின் கோபுர திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஆதிமுலம், சுகாதார பணிகள் இணை இயக்குநர் அருண்மொழி, துணை இயக்குனர் மீராமைதீன் உள்பட பலர்

கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

விழாவில் மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பேசியதாவது, 

நெல்லை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள மிக்ஸி, பேன், கிரைண்டர் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதுபோல திருமண உதவித் திட்டத்தின் கீழ் பிளஸ் டூ படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம், 50 ஆயிரம் ரூபாயும் வழங்கும் திட்டத்துக்கு கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

திருமண உதவித் தொகையை திருமணம் ஆவதற்கு 1 மாதத்திற்கு முன்பே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு அறிவித்த இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. பட்டா மாற்றத்துக்கு வீண் அலைச்சலைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட நிர்வாக அலுவலகத்திலேயே மனு கொடுக்கும் வசதியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் அரசின் திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசியதாவது,

தமிழக முதல்வர் பொதுமக்கள் மேம்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைத்து நலத்திட்ட உதவிகளும் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைய ஏற்பாடு செய்து வருகிறார். எனவே, தன்னிறைவு பெற்ற தமிழகம் விரைவில் உருவாகும் என்றார்.

விழாவுக்கு அதிமுக மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், அண்ணா தொழிற்ச்சங்க மாவட்ட தலைவர் சிவணு பாண்டியன், பொருளாளர் பரமசிவன், மத்திய சங்க செயலாளர் முருகேசன், தொழிற்ச்சங்க தலைவர் நாசர், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராமையா, தொகுதி இணை செயலாளர் நடராஜன், முருகையா, நகர செயலாளர் தங்கவேலு, ஒன்றிய செயலாளர் செல்லப்பன், வழக்கறிஞர் வெங்கடேசன், மாணவரணி ராஜா, நகர துணை செயலாளர் வி. ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் சீதாமோகன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment