6 புதிய தமிழக அமைச்சர்களும் பதவியேற்றனர்

 தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 6 அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சண்முக வேலு, ஆர்.பி.உதய குமார், எஸ்.பி.சண்முக நாதன், என்.ஆர்.சிவபதி, ஜி.செந்தமிழன், புத்திசந்திரன் ஆகிய 6 பேர் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமையன்று பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.



அவர்களுக்குப் பதில், புதிய அமைச்சர்களாக எஸ்.தாமோதரன் ஆர். காமராஜ், எஸ். சுந்தர்ராஜ், எம்.பரஞ்சோதி, வி.மூர்த்தி, கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அமைச்சர்களுக்கு இலாகா

புதிய அமைச்சர்களில் தாமோதரனுக்கு வேளாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜுக்கு உணவு துறையும், சுந்தராஜுக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் கிடைத்துள்ளது. பரஞ்சோதி சட்டம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகிறார். வி.மூர்த்தி பால்வளத்துறை, ராஜேந்திரபாலாஜி செய்தித் துறை பொறுப்புகளை ஏற்கிறார்கள்.

புதிய அமைச்சர்கள் 6 பேர்களின் பதவி ஏற்பு விழா இன்று மாலை கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ரோசையா புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment