தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை

சட்டமன்ற தீர்மானம் மூலம் வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ புகழாரம்

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசு தலைவருக்கு வேண்டுகோள்விடுத்து, ஒரு மனதாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.