இன்றும் கலக்கும் எம்ஜிஆர் படங்கள் – கட்அவுட் வைத்துக் கொண்டாடிய கர்நாடக ரசிகர்கள்

இன்றும் கலக்கும் எம்ஜிஆர் படங்கள் – கட்அவுட் வைத்துக் கொண்டாடிய கர்நாடக ரசிகர்கள்

கர்நாடகாவில் உள்ள 11 திரையரங்குகளில் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் திரைப்படம் திரையிடப்பட்டது. பிரம்மாண்ட கட்அவுட்டுகள், தோரணங்கள் என அலங்கரித்து, எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
எம்.ஜி.ஆரின் பழைய திரைப்படங்கள் சென்னையில் வெளியாகி வசூலை வாரிக் குவிக்கின்றன. “நினைத்ததை முடிப்பவன்”, “ஆயிரத்தில் ஒருவன்”, “அடிமைப்பெண்”, “நாடோடி மன்னன்”, “உலகம் சுற்றும் வாலிபன்”, “நேற்று இன்று நாளை”, “எங்க வீட்டுப்பிள்ளை” உள்ளிட்ட பல படங்கள் இங்கு தொடர்ச்சியாக வெளிவருகின்றன.

இதுபோல் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இருவரும் நடித்த “அடிமைப் பெண்” திரைப்படம் 11 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்துக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்தோடு திரண்டு வந்தனர்.
படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. எம்.ஜி.ஆர். கட்அவுட்டுகள், பேனர்களை வைத்து ரசிகர்கள் வைத்து ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஆயிரம் மாலைகள் அணிவிக்கப்பட்ட பேனரும் வைத்திருந்தனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
படம் பார்க்க வந்தவர்களுக்கு பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
எம்ஜிஆர் மறைந்து 25 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும், ரசிகர்கள் மத்தியில் அவரது திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு வியப்புக்குரியது.

No comments:

Post a Comment