எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு? முதல்வரிடம் அறி்க்கை தாக்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா
 உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவு, வளமான பிரிவு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட அறி்க்கையை முதல்வரிடம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று அளித்தது.
ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனில், அத்தகைய முடிவு, எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின்படி அமைய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு  உத்தரவிட்டது. மேலும், அரசு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில்  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓராண்டிற்குள் தனது பரிந்துரையை அரசிற்கு அளிக்க வேண்டுமென்றும், உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின்   மேற்குறிப்பிட்ட தீர்ப்பிற்கிணங்க, ஆணையம் கோரிய பல்வேறு விவரங்கள் திரட்டப்பட்டு ஆணையத்திற்கு அளிக்கப்பட்டன.   அவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவு, வளமான பிரிவு ஆகியன குறித்து விரிவாக ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட அறிக்கையினை தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிடம் இன்று, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர்.எம்.எஸ். ஜனார்த்தனம் மற்றும் உறுப்பினர்கள் அளித்தனர்.    அப்போது, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர்  ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment