தமிழக எம்.எல்.ஏக்களுக்கு தொகுதிப் படி உயர்வு- இனி சம்பளம் ரூ. 55,000!

தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கான தொகுதிப் படி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம் இனி மாதம் ரூ. 55,000 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்ததாவது:

சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிப் படி தற்போது உள்ள ரூ. 5000 என்பதிலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படுகிறது.

அதேபோல சபாநாயகர் மற்றும் அமைச்சர்களின் படியும் ரூ. 5000 என்பதிலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்படுகிறது.


இதேபோல முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10,000 என்பதிலிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ. 6000 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த படி உயர்வு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த உயர்வைத் தொடர்ந்து, இதையடுத்து எம்.எல்.ஏக்களின் மாதச் சம்பளம் இனி ரூ. 50,000 என்பதிலிருந்து ரூ. 55,000 ஆக உயரும். அதேபோல சபாநாயகர் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் ரூ. 27,000 என்பதிலிருந்து ரூ. 32,000 ஆக உயரும் என்றார்.

No comments:

Post a Comment