உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்

மின்சாரம், விஷவாயு தாக்கி
உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்
ஜெயலலிதா உத்தரவு
சென்னை, அக்.20-மின்சாரம், விஷவாயு தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-மின்சாரம் தாக்கி பலி கடலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவராகப் பணி புரிந்து வந்த வி.சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவர் பஞ்சாயத்து மின் மோட்டாரை பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், நெடுங்குன்றம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் உள்ள பதப்படுத்தும் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த திருப்போரூர் வட்டம், மேலக்கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் முரளி, செங்கல்பட்டு வட்டம், கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அண்ணாமலை என்கிற ஏழுமலை ஆகியோர் விஷ வாயு தாக்கியதில் மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தவறிவிழுந்து சாவுசென்னை, அரசினர் தோட்டம், தமிழ்நாடு அரசு பல்வகை சிறப்பு மருத்துவமனையின் மேற்கூரையின் மேல் கட்டிடப்பணியை மேற்கொண்டிருந்த பழனிசாமி என்பவர் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், அல்லாளச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவரின் மகன் முத்து 29-6-2015 அன்று அல்லாளச்சேரி கிராமத்திலிருந்து கணியந்தல் கிராமத்திற்கு தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அரசுப்பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அயனாவரம்சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்த டிரைவர் குணாளன் என்பவர் 10-7-2015 அன்று சென்னை, அயனாவரம் வட்டம், ஜி.கே எம் காலனி 30-வது தெருவில் கழிவு நீர் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது வாகனத்தின் மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment