மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் தேர்தலில் அதிமுக பெருவாரியாக வெற்றி

 தமிழக மாநகராட்சிகளில் நடந்த மண்டலக் குழுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவே பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது.

மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் அனைத்து மண்டலங்களிலும் அதிமுகவினரே பெருவாரியாக வென்றுள்ளனர்.



சென்னையில் அதிமுகவுக்கு 14, திமுகவுக்கு 1

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலத் தலைவர்கள் பதவிக்கான தேர்தலில் 14ல் அதிமுக வெற்றி பெற்றது. 7வது மண்டலத்தில் மட்டும் திமுக வென்றது.

திருச்சியில் 4ம் அதிமுகவுக்கே

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலத் தலைவர் பதவிகளையும் அதிமுகவே கைப்பற்றியுள்ளது. அனைவரும் உடனடியாக பதவியேற்றுக் கொண்டனர்.

மதுரையில் 5ம் அதிமுகவுக்கே

மதுரையில் உள்ள ஐந்து மாநகராட்சி மண்டலத் தலைவர் பதவிகளையும் அதிமுகவே கைப்பற்றியது.

கோவையில் 5ம் அதிமுகவுக்கே

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன. இந்த பதவிகளை அப்படியே அதிமுக அள்ளிக் கொண்டு விட்டது. ஐந்து மண்டலங்களுக்கும் அதிமுகவினரே தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேலூரில் ஆளுக்கு 2

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலத் தலைவர் பதவிகளை அதிமுகவும், திமுகவும் ஆளுக்கு இரண்டாக வென்றுள்ளன.

சேலத்தில் 4ம் அதிமுகவுக்கே

இதேபோல சேலம் மாநகராட்சியிலும் நான்கு மண்டலங்களையும் அதிமுகவே வென்றது.

நெல்லையில் 4ம் அதிமுகவுக்கே

நெல்லை மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத் தலைவர் பதவியிடங்களையும் அதிமுகவே பிடித்துள்ளது.

நெல்லை மண்டலம் மோகன், தச்சை மாதவன், பாளை எம்.சி.ராஜன், மேலப்பாளையம் ஹைதர்அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் யாரும் போட்டியிடவில்லை.

தூத்துக்குடியில் 2 அதிமுக, ஒரு திமுக, ஒரு காங்.

தூத்துக்குடி மாநகராட்சியில், மேற்கு, வடக்கு மண்டலங்களை அதிமுக கைப்பற்றியது. கிழக்கில் திமுகவும், தெற்கில் காங்கிரஸும் வென்றன.

கட்சி் மாறி வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள்!

கிழக்கு மண்டலத்திலும் அதிமுகதான் ஜெயிதிருக்கும். ஆனால் அங்கு 3 அதிமகு கவுன்சிலர்கள் அணி மாறி திமுகவுக்கு வாக்களித்து அதிமுகவை அதிர வைத்தனர். இதனால் திமுக வென்று விட்டது.

ஈரோட்டிலும் அதிமுகவே வெற்றி

அதேபோல ஈரோடு மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

No comments:

Post a Comment