Showing posts with label அரசு கேபிள் டிவி. Show all posts
Showing posts with label அரசு கேபிள் டிவி. Show all posts

இன்று முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு- ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் அரசு கேபிள் டிவி சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் சென்னையில் மட்டும் இது தொடங்கப்படவில்லை.

ரூ. 70 என்ற குறைந்த கட்டணத்திற்கு 90 சேனல்கள் வரை இந்த கேபிள் டிவி மூலம் வழங்கப்படும். இந்த 70 ரூபாயில், 20 ரூபாயை, கேபிள் டிவி நிறுவனங்கள், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

ஒளிபரப்பு தொடங்கும்- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு முழு அளவில் தொடங்கும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அவர் பேசுகையில், 

அரசு கேபிள் டி.வி. ஏற்கெனவே அறிவித்தபடி அரசு கம்பிவட தொலைக்காட்சிக் கழகத்தைப் புத்துயிரூட்ட இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது தஞ்சாவூர், கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஒளிபரப்பு தலை முனையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.