தமிழக அரசின் இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 135 கோடியும், இலவச மாடுகள் திட்டத்துக்கு ரூ. 56 கோடியும் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசியபோது தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று 2011-12ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.
காலை 10.40 மணிக்கு சட்டசபை கூடியதும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.