தமிழகத்தின் பத்து மாநகராட்சிகளின் புதிய மேயர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர். அதிமுகவைச் சேர்ந்த மாநகராட்சிக் கவுன்சிலர்களும் நாளை பதவியேற்கின்றனர். சென்னை மாநகராட்சி மேயர் பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.தமிழகத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. பத்து மாநகராட்சிகளையும் அது கைப்பற்றியது. நகராட்சிகளில் 124ல் 89 இடங்களை அது கைப்பற்றியது.