Showing posts with label Tamilnadu new ministers List 2011. Show all posts
Showing posts with label Tamilnadu new ministers List 2011. Show all posts

டெல்லியில் அதிமுக கொடி பறக்கும் – அமைச்சர் பேச்சு

விழுப்புரம், ஜூலை 18: டெல்லியே ஜெயலலிதாவை எதிர்பார்க்கிறது. விரைவில் அங்கு அதிமுக கொடி பரக்கும் என்று தமிழக அமைச்சர் சண்முகம் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்
விழுப்புரம் மாவட்ட (வடக்கு) அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:

தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் ;சட்ட அமைச்சர் பதவி நீக்கம் ஏன்? புதிய தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஒன்றரை மாதத்தில் தமிழக அமைச்சரவையில் 2 வது முறையாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமோக ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., முதல்வரானார். கடந்த 15 ம் தேதி பொறுப்பேற்ற இவர் தனது கீழ் இயங்கும் 34 அமைச்சர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டார். இதில் பெரும்பான்மையானவர்கள் புதியவர்களே ஆவர் . கடந்த 27 ம்தேதி அமைச்சர்கள் இலாகாக்களை மாற்றியும், மேலும் புதிதாக முகம்மது ஜான் என்பவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய மாற்றத்தின்படி புதிய விவரம் வருமாறு:

கைத்தறி துறை அமைச்சராக இருந்த பி.வி.,ரமணன் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் சேர்த்து கவனிப்பார், சுற்றுலா துறை அமைச்சராக இருந்த புத்திச்சந்திரனுக்கு உணவுத்துறையும், உணவுத்துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு வணிகவரித்துறையும், வணிக