Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts

சிங்களருக்கு இணையான அந்தஸ்து தமிழருக்கு கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது!- ஜெ

இலங்கையில் சிங்களருக்கு இணையாக அந்தஸ்து தமிழர்களுக்கும் கிடைக்கும்வரை எனது அரசு ஓயாது, என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் 8.6.2011 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே விமர்சித்ததால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முழு விவரம்:

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்