Showing posts with label ஜெயலலிதா Jayalalithaa. Show all posts
Showing posts with label ஜெயலலிதா Jayalalithaa. Show all posts

திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று சூறாவளிப் பிரசாரம் செய்யவுள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். இத்தொகுதியில் திமுக சார்பில், நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு களமிறக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையாக உள்ளது. இதனால் அதிமுகவினர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

தமிழக பள்ளிகளில் மதிய உணவைப் போல விரைவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்

தமிழகத்தில் தற்போது மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வருவதைப் போல, விரைவில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி லட்சக்கணக்கான ஏழை பெற்றோர்களின் மனதில் பால் வார்த்தார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கூடங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.

ஈழப் பிரச்சினையில் ஜெ. நடிவடிக்கை – சீமான் நேரில் நன்றி


 ஈழப் பிச்சினையில் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நிற்போம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும், கட்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு நேரில் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தது. இதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அதிமுக பதவி ஏற்ற கையோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சில கோரிக்கைகளை முன் வைத்தது.

எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு? முதல்வரிடம் அறி்க்கை தாக்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா
 உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவு, வளமான பிரிவு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட அறி்க்கையை முதல்வரிடம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று அளித்தது.
ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனில், அத்தகைய முடிவு, எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின்படி அமைய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு  உத்தரவிட்டது. மேலும், அரசு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில்  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓராண்டிற்குள் தனது பரிந்துரையை அரசிற்கு அளிக்க வேண்டுமென்றும், உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.