Showing posts with label jayalalitha. Show all posts
Showing posts with label jayalalitha. Show all posts

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,053 கோடி நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு

அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாநில நிதி ஆணைய மானியமாக ரூ.3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது ஊரக வளர்ச்சி என்பதால், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்க டிச 15ம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்-ஜெ. அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 15ம் தேதி தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு பிரச்சனை தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்திற்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்கள் கொடுத்து, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு நம்புகிறது.

மேலும் மேலும் கடன் வாங்கினால் மக்கள் தலையில்தானே விடியும்?-ஜெ.

கடன் வாங்கியாவது பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்து கழகங்களை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் கூறுவது போல், மேலும் மேலும் கடன் வாங்கினால் அது யார் மீது விடியும். அதுவும் மக்கள் மீது தானே விடியும். இது எப்படி ஒரு நல்ல நிர்வாகமாக இருக்க முடியும் என்று கேட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களை உயிர்ப்பிப்பதற்கும், இந்த நிறுவனங்கள் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றிடுவதற்கான வழிவகை குறித்தும் 17.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கட்டண உயர்வுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன.

பெத்திக்குப்பத்தில் 79 கோடியில் நவீன சோதனைச்சாவடி - ஜெ. அறிவிப்பு

 திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பெத்திக்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியாக உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தச் சோதனைச் சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட 79 கோடியே, 77 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலியில் ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு வளாகம் – ஜெ. அனுமதி

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பண்பாட்டு மையம், அரசு இசைப் பள்ளி, கலை மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலை பண்பாட்டு வளாகம் ஒன்றை ஒரு கோடி ரூபாய் செலவில் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

கலை பண்பாட்டு வளாகம்

சொந்த கட்டிடங்களில் காவல் நிலையங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ரூ.5 கோடியே 14 லட்சம் செலவில் 11 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

'சாலை விபத்து விசாரணை வழிமுறை' திட்டம்: முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்

 'சாலை விபத்து விசாரணை வழிமுறை' என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார். சாலை விபத்து விசாரணைக்கு உதவியாக இருக்கும் நவீன கருவிகளையும், வாகனங்களையும் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு அவர் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை, உலக வங்கி திட்டத்தின் கீழான தமிழ்நாடு நகர வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் சாலை விபத்து விசாரணை வழிமுறை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தினமும் வரும் 3 ஆயிரம் கோரிக்கை மனுக்கள்

 தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தினமும் 3 ஆயிரம் விண்ணப்ப மனுக்கள் குவிந்து வருவதாக தனிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனுக்கள் உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் எனது அரசு வேரறுக்கும்- ஜெயலலிதா உறுதி

தமிழகத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள், நில அபகரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறைக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அரசின் முக்கியத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் மிக முக்கிய பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உள்ளது. மேலும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.

இதன் காரணமாக இவர்களை அவ்வப்போது நேரில் அழைத்து மாநாடு நடத்துவது மாநில முதல்வர்களின் வழக்கமாகும். அந்த வகையில் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார். இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

6 புதிய தமிழக அமைச்சர்களும் பதவியேற்றனர்

 தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 6 அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சண்முக வேலு, ஆர்.பி.உதய குமார், எஸ்.பி.சண்முக நாதன், என்.ஆர்.சிவபதி, ஜி.செந்தமிழன், புத்திசந்திரன் ஆகிய 6 பேர் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமையன்று பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு - ஆறு புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு

கட்சியில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்து விசுவாசமாக உழைத்ததற்கு பரிசாக தமிழக அமைச்சரவையில் 6 புதிய அமைச்சர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

தமிழக அமைச்சரவை நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 16-ம் தேதி பொறுப்பேற்றது. நான்கு மாதங்களில் நான்காவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று தமிழக அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஆறு பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சம் எங்கும் தியாகச் சிந்தனைகள் பரவி நிற்கட்டும்- ஜெயலலிதா பக்ரீத் வாழ்த்து

இதயம் முழுவதும் இறை உணர்வு பொங்கிப் பெருகட்டும், நெஞ்சம் எங்கும் தியாகச் சிந்தனைகள் பரவி நிற்கட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பக்ரீத் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விடுத்துள்ள செய்தியில், தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஈரோடு ஆம்னி பஸ் விபத்தில் 8 பேர் பலி-ஜெ. ரூ. 1 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு

ஈரோடு அருகே டேங்கர் லாரியுடன் ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானதற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், சூரியம்பாளையம் கிராமம், சித்தோடு அருகில் 6.11.2011 அன்று பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, எரிபொருள் திரவம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியின் மீது மோதியதால், டேங்கர் லாரியில் இருந்த எரிபொருள் பேருந்தில் சிதறி, அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டதில், பேருந்து ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயும், மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும்

மழை பலி இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு- ஆடு, கோழிகளை இழந்தோருக்கும் நிவாரணம்-ஜெ. அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா
மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாடுகளை இழந்தோருக்கு ரூ. 20,000மும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 2000மும், கோழிகளை இழந்தவர்களுக்கு ரூ. 100ம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று புகார்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் சரிவர இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று நள்ளிரவு நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் 14 பேர் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

முத்துராமலிங்கத் தேவரின் வாரிசு வெள்ளைச்சாமி தேவர் மரணம்- ஜெ. இரங்கல்

வெள்ளைச்சாமி தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசான வெள்ளைச்சாமி தேவர் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாரிசுகளில் ஒருவருமான என். வெள்ளைச்சாமி தேவர் இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

தீபாவளி திருநாளில் இருள் அகன்று எங்கும் மகிழ்ச்சி ஒளிச்சுடர் ஒளிரட்டும்: ஜெயலலிதா வாழ்த்து

இந்த தீபாவளித் திருநாளில் நோக்கும் இடமெல்லாம் களிப்பும், இனிமையும் நீக்கமற நிறையட்டும்; நிம்மதி பெருகட்டும்; உலகம் முழுமையும் அக இருளும், புற இருளும் அகன்று எங்கும் மகிழ்ச்சி ஒளிச்சுடர் ஒளிரட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தில் கூறியிருப்பதாவது,

நாடு முழுவதும் மகிழ்ச்சிப் பொங்க உற்சாகத்துடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சுடர்விடும் தீபங்களின் ஒளி போல மக்கள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுமார் 29,000 பேர் போனஸ் பெறவிருக்கின்றனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும்

தோள்களில் சூடி அழகு பார்க்க வெற்றி மாலை காத்திருக்கிறது, கண்ணியத்தோடு பெறுவோ்-ஜெ.

தமிழக வாக்காளர்களின் பேராதரவு நம்முடைய இயக்கத்திற்கு இருக்கிறது. வெற்றி மாலையை கழகத்தின் தோள்களில் சூடி அழகு பார்க்க, பெருமை கொள்ள தமிழ்நாடே காத்திருக்கிறது. நாம்தான் கண்ணியத்தோடு அந்த வெற்றி மாலையை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணிவினை பெறவேண்டும். அதற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும், ஒற்றுமையான முயற்சியும் மிகமிக அவசியம் என்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன் என்று அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்திற்கு மின்வரத்து குறைந்தது-தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: ஜெ.

தெலுங்கானா போராட்டம், ஒரிசா வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு வரும் மின்சாரத்தின் அளவு 1000 மெகாவாட்டுக்கும் மேலே குறைந்து விட்டது. நிலைமையை சமாளிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் மின் நிர்வாகத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக சென்னை நீங்கலாக மாநிலத்தின் பிற இடங்களில் இருந்து வந்த மூன்று மணி நேர மின் தடை 1.7.2011 முதல் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது

திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று சூறாவளிப் பிரசாரம் செய்யவுள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். இத்தொகுதியில் திமுக சார்பில், நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு களமிறக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையாக உள்ளது. இதனால் அதிமுகவினர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.