Showing posts with label தமிழக மீனவர்கள். Show all posts
Showing posts with label தமிழக மீனவர்கள். Show all posts

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இந்தியாவின் மீதான தாக்குதலுக்கு சமம்: ஜெ.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருத வேண்டும். இது உள்ளூர் பிரச்சினை அல்ல, தேசியப் பிரச்சினை. எப்படி பாகிஸ்தான் படையினர் எல்லைப் பகுதியில் தாக்குவதை மத்திய அரசு சீரியஸாக கருதுகிறதோ, அதே போல இலங்கைப் படையினரின் தாக்குதலை மத்திய அரசு இனியாவது கருத வேண்டும். இலங்கைக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய வெளியுறவுச்செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் கண்டிப்பு கலந்த குரலில் கூறியுள்ளார்.