அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை முழு விவரம்..
மாணவர்களுக்கு லேப்டாப் : பிளஸ்- 1, பிளஸ் - 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.
சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும்.
10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்குகல்வி உதவித் தொகை , பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையானபாதுகாப்பு வழங்கப்படும்.
கேபிள் டி.வி., அரசுடைமையாக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.
ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்,
அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரசிகளுக்குபேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன மூன்றும் இலவசமாக வழங்கப்படும்.நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ. 12 ஆயிரம்வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும். 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ். திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும். மேலும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். அனைவருக்கும் 20 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கப்படும்.
மும்முனை இணைப்பு மின்சாரம் : கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கெ?ள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரணைக்கப்படும். வீடு, தெ?ழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்நபர்களுக்கு 4 ஆடுகளும், முக்கிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 60 ஆயிரம் மாடுகள் வரை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர் நலனுக்கு பாதுகாப்பு : அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என்றார். மீன்பிடிக்கு தடை விதிக்கப்படும் 45 நாட்களுக்குமீனவர்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2000 வழங்கப்படும். பருவகாலத்தில் மீன் பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழகத்தை தலை நிமிரச் செய்வது லட்சியம் : தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக்காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம்,நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து - இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம்.
விலைவாசியை குறைக்க சிறப்புத் திட்டம் : விலைவாசி உயர்வினால் இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகளின் செயலற்ற தன்மையால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.விவசாய உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பயனில்லாமல், இடையில் உள்ள இடைத்தரகர்களும், பதுக்கல்காரர்களும், மொத்த விற்பனையாளர்கள், ஆன்லைன் வரன்முறையாளர்களினால் திட்டமிட்டு ஏற்றப்படும் விலைவாசியின் ஏற்றம் தடுக்கப்பட்டு, அதைத் தடுக்க அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.
விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செடீநுயப்படும். கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவசமாக நவீன பசுமை வீடுகள் : வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாடீநு செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாடீநு மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.
இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம் : இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயம், குடும்பம், தொழில்களுக்கான மின்சார விநியோகம் தனியாக பிரிக்கப்பட்டு, அதை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விநியோக முறையில் மாற்றம் செய்து சீரமைப்போம்.
கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார்துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும். மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
No comments:
Post a Comment